தமிழ்நாடு இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைப்பணியின் குரூப்-8 பணியில்
அடங்கிய செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கு ( Executive Officer Grade-IV) 23 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 16.11.2013 அன்று எழுத்துத் தேர்வையும் 23.06.2015, 08.07.2015 மற்றும் 23.07.2015 ஆகிய நாட்களில் நேர்காணல் தேர்வையும் நடத்தியது.
விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மொத்த மதிப்பெண்கள், இட ஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் மேற்படி பதவிக்குத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்களைக் கொண்ட தெரிவுப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்திலும் தேர்வாணைய அலுவலக அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.