WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 27, 2015

ஒரே இடத்துக்கு, இரண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், யாருக்கு பணி ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில், ஒரே இடத்துக்கு, இரண்டு ஆசிரியர்கள்
நியமிக்கப்பட்டுள்ளதால், யாருக்கு பணி ஒதுக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விருப்ப மாறுதல் மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகள், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தன.தஞ்சை மாவட்டத்தில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பணியாற்றிய முதுகலை ஆசிரியருக்கு, நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பள்ளிக்கு, 23ம் தேதி பணி இட மாறுதல் வழங்கப்பட்டது.அவர் தஞ்சை மாவட்டத்தில் விடுவிப்பு ஆணை பெற்று, நீலகிரி மாவட்ட பள்ளிக்கு சென்ற போது, அங்கு ஆசிரியை ஒருவர் அதே இடத்துக்கு பணி மாறுதல் வாங்கி வந்துள்ளார்.நீலகிரி மாவட்டம் மஞ்சக்கம்பை உயர்நிலை பள்ளியில் பணியாற்றிய அவருக்கு, முதுநிலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, கோத்தகிரி பள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் குழப்பத்தால், இரண்டு பேரில் யாருக்கு பணி வழங்குவது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.