WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 26, 2015

முக்கிய செய்தி: மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயருகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை
மாதங்களில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த ஆண்டும் ஜூலை மாதத்திற்கு உரிய அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 113 சதவீத அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இது 119 சதவீதமாக உயருகிறது. அகவிலைப்படி உயர்வு குறித்து அடுத்த மாதம் (செப்டம்பர்) மத்திய மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட இருக்கிறது. ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு இந்த 6 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இதன் மூலம் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.