WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 30, 2015

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தர கோரிக்கை.

கோவை ராஜவீதி அரசு துணி வணிக பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்
தமிழக பகுதி நேர ஆசிரியர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சங்க மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் தலைமைவகித்தார். கூட்டத்தில், 3 ஆண்டுகள் பணி முடிக்கும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.பகுதிநேர ஆசிரியர்கள் மாநில பொதுசெயலாளர் ராஜாராமன் கூறுகையில், ''பணிநிரந்தரம் செய்யப்படவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆலோசனை கூட்டத்தில் இதுகுறித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. எங்களது, கோரிக்கை மனுவை கலெக்டரை சந்தித்து, வழங்க உள்ளோம்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.