ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு
நாளை(ஆக.,12) துவங்கி, ஆக., 29 வரை நடக்க உள்ளது.
நடப்பு கல்வி ஆண்டில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நாளை (ஆக., 12) காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.
வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஒரு முழு கல்வி ஆண்டு பணியாற்றிருக்க வேண்டும். முற்றிலும் பார்வையற்றோர், 40 சதவீதம் அதற்கு மேலும் ஊனமுடைய மாற்றுத்திறனாளி சான்று வைத்துள்ளோர், ராணுவத்தில் பணியாற்றுவோரின் மனைவி, இருதய மாற்று, சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், கடும் பாதிப்பிற் குள்ளான புற்றுநோயாளிகள், விதவை, 40 வயது கடந்த முதிர் கன்னியருக்கு விலக்கு அளிக்கப் படுகிறது, என முதன்மைக்கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு தெரிவித்தார்.
கலந்தாய்வு நடைபெறும் தேதிகள் விவரம்
தேதி பங்கேற்பவர்கள்
ஆக., 12 மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாறுதல் கோரும் அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ,மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் உடற்கல்வி, கலை, இசை, தையல், இடைநிலை ஆசிரியர்கள்
ஆக., 14 பதவி உயர்வு கோரும் அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்.
ஆக., 16 மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாறுதல் கோரும் அரசு, நகராட்சி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள். மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோரும் உடற்கல்வி, கலை, இசை, தையல், இடைநிலை ஆசிரியர்கள்.
ஆக., 18 பதவி உயர்வு கோரும் அரசு, நகராட்சி, உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்.
ஆக., 22 மாவட்டத்திற்குள் மாறுதல் கோரும் அரசு நகராட்சி, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள்.
ஆக., 23 மாவட்டம் விட்டு மாறுதல் கோரும் அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள்.
ஆக., 24 பதவி உயர்வு கோரும் அரசு, நகராட்சி, மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள், நேரடி நியமனம் பெற்ற 55 முதுகலை ஆசிரியர்கள்,
ஆக., 26-29 வரை பட்டதாரி ஆசிரியர் பணி நிரவல்
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.