பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு "ஒரிஜினல்'
மதிப்பெண் சான்று, பள்ளிகளுக்கு வந்து சேர்ந்தது; சான்றிதழ் சரிபார்ப்பு பணியில் நேற்று ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.கடந்த மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. தேர்வு முடிவு, மே 21ல் வெளியானதை தொடர்ந்து, 29ம் தேதி முதல், பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு (வரும் 21 வரை), தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பயன்படுத்தி கொள்ளலாம்.
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்ன தாகவே, பள்ளிகளில், இன்று முதல் "ஒரிஜினல்' மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதற்கென, அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட "ஒரிஜினல்' மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளிகளுக்கு வந்து சேர்ந்தது.
இன்று காலை 10:00 மணி முதல் பள்ளிகளில், மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாணவ, மாணவியர், தங்களது பள்ளிகளுக்கு நேரில் சென்று, பெற்றுக்கொள்ளலாம். தனித்தேர்வர்கள், தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தில், இதை பெறலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.