தமிழகத்தில் நில அளவை துறையினரால், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய
அளவிலான, 'மேப்' வெளியிடப்பட்டிருந்தாலும், அவை முழுவதும் ஆங்கிலத்தில் உள்ளன. இவை அனைத்து மாணவ, மாணவியருக்கும் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது என்பதால், தமிழ் மொழியில், மேப் தயாரித்து, பள்ளிகளில் வைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, ஒவ்வொரு ஒன்றியத்துக்கும் ஆங்கிலத்தில் உள்ள ஊர் பெயர், அதற்கு, அரசாணையில் உள்ள தமிழ் பெயர், பேச்சு வழக்கில் உள்ள ஊர் பெயர் ஆகியவற்றை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒவ்வொரு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், வரலாற்று ஆசிரியர்கள், நில அளவை அலுவலர்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இவர்கள், ஒவ்வொரு ஊரின் எல்லை, அதன் தமிழ் பெயர் உள்ளிட்டவற்றில் உள்ள பிழைதிருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணி நிறைவடைந்த பின், ஒவ்வொரு பள்ளிக்கும், தமிழில், மாநிலம், மாவட்டம் மற்றும் ஒன்றிய அளவிலான வரைப்படங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. இதன் மூலம், மாணவ, மாணவியர், தாங்கள் வசிக்கும் ஊர், அதை சுற்றியுள்ள கிராமங்களின் அமைப்பு உள்ள நில அமைப்புகளை தெளிவாக தெரிந்து கொள்ள முடியும் என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.