அரசின் அனுமதி பெற்று, தமிழ கத்தின் அனைத்து மாவட்டங்க ளிலும்
உறுப்புக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் க.பாஸ்கரன் தெரிவித்தார். தமிழ்ப் பல்கலைக்கழக 12-வது துணைவேந்தராக க.பாஸ்கரன் நேற்று பொறுப்பேற்றுக் கொண் டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அறிவியல் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதில், ஆய்வுப் பணி மட்டுமில்லா மல், அடித்தட்டு மக்களுக்கும், மாணவர்களுக்கும் சென்றடையும் வகையில் பாடத்திட்டங்கள், படிப்புகள் கொண்டுவரப்படும். தஞ்சையைச் சுற்றியுள்ள மாண வர்கள் பயன்பெறும் வகையில், அடுத்த கல்வி ஆண்டில் பல் கலைக்கழகத்தில் அடிப்படை அறிவியல் பட்டப் படிப்புகள் கொண்டு வரப்படும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக் காகத் தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தின் செயல் பாடு தஞ்சையில் மட்டுமே உள்ளது. அதை மாற்றி அமைக்கும் வகையில், அரசின் அனுமதி பெற்று, அனைத்து மாவட்டங்களிலும் உறுப்புக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பல நாடுகளில் கிளைக ளும், படிப்பு மையங்களும் தொடங் கப்படும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி பயில, கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத கட்டணச் சலுகை அளிக்கப்படும். ஸ்வீடன், ஜெர்மன் நாடுகளில் தாய் மொழியில் மருத்துவக் கல்வி அளிக்கப்படுகிறது. இங்கு, தமிழில் எழுத இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்க வில்லை. அனுமதி அளித்தால், அதற்கான பாடத்திட்டம் உருவாக்கப்படும்” என்றார்.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.