WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, August 18, 2015

பள்ளி கல்வித்துறை புது உத்தரவு.

மதுக்கடையை மூடக்கோரி நடத்தப்படும் போராட்டங்களில், மாணவர்கள்
ஈடுபடக்கூடாது' என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழகத்தில் சில இடங்களில், மதுக்கடைகளை மூட வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டங்களில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்; இதனால், அவர்களது கல்வி பாதிக்கிறது. கல்வி பாதிக்காமல் தவிர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் வகுப்பு ஆசிரியர்களுக்குஉள்ளது.இதுபோன்ற போராட்டங்களில், பங்கேற்கக்கூடாது என, மாணவ - மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும். பிரார்த்தனை கூட்டங்கள், நீதி போதனை வகுப்பு மற்றும் பாட வேளைகளில், வகுப்பு ஆசிரியர்கள், மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.