WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, August 2, 2015

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு தேதி: பள்ளி கல்வி இயக்ககம் அறிவிப்பு.

ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல் கலந்தாய்வு விவரங்களை
பள்ளி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் 2015-16 கல்வி ஆண்டுக்கான பொது பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு அட்டவணையை வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:- தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் வருகிற 7-ந்தேதி வரை சமர்ப்பிக்கலாம். அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு 12-ந்தேதி நடைபெற உள்ளது. அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 14-ந்தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு 16-ந்தேதியும், அரசு, நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 18-ந்தேதியும் நடைபெற உள்ளது. அரசு, நகராட்சி மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 22-ந்தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு 23-ந்தேதியும், முதுகலை ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 24-ந்தேதியும் நடைபெற உள்ளது. முதுகலை ஆசிரியர்கள் நேரடி நியமனம் (55 பேர் மட்டும்) 24-ந்தேதி நடைபெற உள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கான கலந்தாய்வு 12-ந்தேதியும், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு 16-ந்தேதியும் நடைபெற உள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவலுக்கான கலந்தாய்வு 26-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.