WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, September 11, 2015

வங்கிகளுக்கு 2, 4-ஆவது சனிக்கிழமைகள் விடுமுறை: நாளை தொடக்கம்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு 2, 4-
ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறை விடப்படும் நடைமுறை செப்டம்பர் 12-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இந்திய வங்கிகள் நிர்வாகிகள் அமைப்பும் (ஐபிஏ), வங்கிகளின் தொழிற்சங்க நிர்வாகிகளும் செய்து கொண்ட உடன்பாட்டின் அடிப்படையில், அனைத்து வங்கிகளுக்கும் 2-ஆவது 4-ஆவது சனிக்கிழமைகளில் விடுமுறையை மாற்றுமுறை ஆவணங்கள் சட்டம் 1881-இன் அடிப்படையில் செப்டம்பர் மாதம் முதல் அமல்படுத்துமாறு மத்திய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இந்த மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 12) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இதேபோன்று 4-ஆவது சனிக்கிழமையன்று (செப்டம்பர் 26) வங்கிகளுக்கு விடுமுறை நாளாகும். இவ்வாறு 2, 4-ஆவது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு பொது விடுமுறை விடப்படுவதால், அனைத்து வங்கிகளும் மற்ற சனிக்கிழமைகளில் தங்களது வார நாள்களின் வேலைநேரத்தில் முழுமையாகச் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.