அரசு தேர்வுத்துறை இயக்குநர் (பொறுப்பு) தண்.வசுந்தராதேவி நேற்று
வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செப்டம்பர், அக்டோபர் எஸ்எஸ் எல்சி துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் மற்றும் சிறப்பு அனுமதி திட்டத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் உட்பட அனைவரும் 19-ம் தேதி (சனிக்கிழமை) முதல் அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.tndge.in) இருந்து தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதேபோல், பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத் தின் கீழ் விண்ணப்பித்தவர்கள் 18-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதி விறக்கம் செய்துகொள்ளலாம். தேர் வுக்கூட அனுமதிச்சீட்டு இல்லாமல் எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.