WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 22, 2015

செப்.26 முதல் அக்.4 வரை காலாண்டுத் தேர்வு விடுமுறை.

பள்ளி மாணவர்களுக்கு இந்த ஆண்டு காலாண்டு விடுமுறை செப்டம்பர் 26-
ஆம் தேதி முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை 9 நாள்கள் விடப்பட உள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைகளின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை இப்போது காலாண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 26 முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறைக்குப் பிறகு, பள்ளிகள் அக்டோபர் 5-ஆம் தேதி திறக்கப்படுகின்றன. 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, இரண்டாம் பருவம் அக்டோபர் மாதம் தொடங்கும். இந்தப் பருவத்துக்கான புத்தகங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.