WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 21, 2015

7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய கல்வி பாடத் திட்டத்தின்படி(CBSE) இராணுவ பொது நலக் கல்வி
அமைப்பின் கீழ் (Army Welfare Education Society) இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் 135 ராணுவப் பள்ளிகளில் சுமார் 7 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதில் ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் ஆசிரியர் பணியிலிருந்து விடுவிக்கப்படுவதால் அப்பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்: B/45706/CSB-2015AWES

மொத்த காலியிடங்கள்: 7,000
பணி: PGT (Post Graduate Teacher)
தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், உளவியல், உடற் கல்வியியல், கம்பியூட்டர் சயின்ஸ் போன்ற துறைகளில் முதுகலை மற்றும் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
பணி: TGT (Trained Graduate Teacher) தகுதி: ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் போன்ற துறையில் இளங்கலை மற்றும் பி.எட் முடித்து மத்திய, மாநில அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: PRT (Primary Teacher)
தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்புடன் பி.எட் முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.04.2016 தேதியின்படி 40க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்: ரூ.600. இதனை ஆன்லைன் முறையிலும் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை: http://awes-csb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.09.2015 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி: 23.12.2015 தேர்வு முடிவுகள் http://awesindia.com என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும் முழுவிவரங்கள் அறிய http://awes-cbs.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.