"அக்டோபர், 8ம் தேதி நடக்கும் மாநில அளவிலான வேலை நிறுத்தப்
போராட்டத்தில், அனைத்து ஆசிரியர்களையும் முழு அளவில் பங்கேற்க செய்ய வேண்டும்' என, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாவட்ட செயற்குழு கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். துணைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் தங்கவேலா, பொதுக்குழு உப்பினர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் நடேசன், பொருளாளர் ராமராசு ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர். கூட்டத்தில், ஜேக்டோ ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், அக்டோபர், 8ம் தேதி நடக்கும் மாநில் அளவிலான வேலை நிறுத்தப்போராட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரியர்களையும் முழு அளவில் பங்கேற்க செய்வது என முடிவு செய்யப்பட்டது. உச்சநீதி மன்ற உத்தரவின்படி, தொடக்கக் கல்வி நலனிலும், மாணவர் நலனிலும் பெரும் பாதிப்பையும் ஆசிரியர்களுக்கு சிரமத்தையும் ஏற்படுத்தி வரும், பி.எல்.ஓ., டி.எல்.ஏ., பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்கக்கூடாது. இப்பணி ஆண்டு முழுவதும் தொடர் பணியாக இருப்பதால், தேர்தல் ஆணையம் இப்பணிகளுக்கு, நிரந்தர பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி துவங்கி உள்ள பள்ளிகளில், ஆங்கில வகுப்புகளுக்கு தனியாக கூடுதல் ஆசிரியரை நியமித்து மாணவர் நலன் காத்திட வேண்டும். ஆசிரியர் பயிற்றுனர் பதவிகளுக்கு, தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.