WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, September 15, 2015

தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், வரும், அக்டோபர், 8ம் தேதி, மாநிலம் முழுவதும், ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில், வரும், அக்டோபர், 8ம் தேதி, மாநிலம்
முழுவதும், ஒருநாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு, மாநில தலைவர் வின்சென்ட் செல்வராஜ் தலைமை வகித்தார். அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு தேசிய செயலாளர் அண்ணாமலை, தீர்மானங்களை விளக்கி பேசினார். கூட்டத்தில், மத்திய அரசு, 6வது ஊதியக்குழுவில் வழங்கியுள்ள, அனைத்து படிகளையும், தமிழக அரசும், ஆசிரியர்களுக்கும், அலுவலர்களுக்கும் வழங்க வேண்டும். 50 சதவீதம் அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைத்து வழங்க வேண்டும். சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிப்படி, தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ் பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணையை திருத்தம் செய்து, தமிழை முதல் பாடமாக வைக்க வேண்டும். கடந்த, 1986 முதல், 88 வரை ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களையும், 2004 முதல், 2006 வரை தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களையும் பணியில் சேர்த்த நாள் முதல், பணி வரன்முறை செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும், அக்டோபர், 8 ம் தேதி தமிழக முழுவதும், ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என்பது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.