விக்கிரவாண்டி அடுத்த தாங்கல் துவக்கப் பள்ளியில் ஐந்து வகுப்புகளுக்கு
ஒரே ஆசிரியர் பாடம் எடுப்பதால் பெற்றோர்கள், போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். விக்கிரவாண்டி ஒன்றியம், தாங்கல் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது. இங்கு, மொத்தம் 35 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கு தலைமை ஆசிரியர் லீமா தெரஸ் என்பவரும், அவருடன் உதவி ஆசிரியர் ரகுநாதன் என்பவரும் பணியாற்றி வருகின்றனர்.
இதில் உதவி ஆசிரியர் ரகுநாதன் கடந்த ஓராண்டு காலமாக பள்ளிக்கு வருவதில்லை. விடுப்பு கடிதம் கொடுக்காமல் நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராமல் உள்ளார். இப்பள்ளியை தலைமை ஆசிரியர் லீமா ரோஸ் மட்டுமே, ஐந்து வகுப்புகளுக்கு பாடம் எடுத்து வருகிறார்.
இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள், கலெக்டர் ஆகியோருக்கு பெற்றோர்கள் தரப்பில் மனு கொடுத்தும் பலன் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த பெற்றோர்கள் இறுதி முடிவாக, இப்பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
மாணவர்களின் எதிர்கால நலன் கருதி, கலெக்டர் நடவடிக்கை எடுத்து உடனடியாக, இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியரை நியமிக்க முன்வர வேண்டும் .
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.