ஆசிரியர் தினத்தில், ஆசிரியர்களுக்கு வாழ்த்து சொல்ல இ-போஸ்ட் முறை
அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.
பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட பல்வேறு தின நல்வாழ்த்துக்களை நண்பர்களுக்கும், உறவினர்களுக்குச் சொல்ல வாழ்த்து அட்டைகள், பூங்கொத்துகள் கொடுப்பது வழக்கம். பொள்ளாச்சியில் இதுபோன்ற வாழ்த்துக்களை, தபால் துறை மூலம் பரிமாறிக்கொள்ள சலுகைக்கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏ.4 அளவு தாளில் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ள, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நண்பர்களுக்கு மட்டுமல்லாது, ஆசிரியர்களுக்கு மாணவர்களும், மாணவர்களுக்கு நண்பர்களும், தலைவர்களுக்கு தொண்டர்களும் தங்கள் வாழ்த்துக்களை இ-போஸ்ட் மூலம் தெரிவித்துக்கொள்ளலாம். இதுபற்றி, கூடுதல் தகவல்களை பெற தபால் துறை மார்க்கெட்டிங் அலுவலர் அனந்தநாராயணன் பொள்ளாச்சி, 9442625647 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.