புதுடில்லி: இந்திராகாந்தி தேசிய திறந்த வெளி பல்கலைக் கழகமான
ஐ.ஜி.என்.ஓ.யு., ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, இப்பல்கலைக்கழக துணைவேந்தர் நாகேஸ்வர ராவ் கூறியதாவது: ஐ.ஜி.என்.ஓ.யு.,வில், 28 லட்சம் மாணவர்கள் தொலைதுாரக் கல்வி பயில்கின்றனர். முதன்முறையாக, இந்தாண்டு, மாணவர் சேர்க்கை, ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, மாணவர்களுக்கான தேர்வையும், ஆன்லைன் மூலம் நடத்த பரிசீலித்து வருகிறோம். மத்திய மனித வள அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு ஆகியவற்றின் ஒப்புதல் கிடைத்ததும், ஆன்லைன் தேர்வு அறிமுகப்படுத்தப்படும். சர்வதேச திறந்தவெளி பல்கலைக் கழகங்களில், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அவை, ஆன்லைன் தேர்வுகளை சுலபமாக நடத்துகின்றன. ஆனால், ஐ.ஜி.என்.ஓ.யு.,வில் மாணவர்கள் அதிகம்; அதில், ஏழைகள், பெண்கள், பணியாற்று வோர், இல்லத்தரசிகள் என, பலதரப்பினர் உள்ளனர். அவர்களுக்கு, ஆன்லைன் தேர்வு சுலபமாக இருக்குமா என்றும், பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
ஐ.ஜி.என்.ஓ.யு., 228 வகையான, இளங்கலை, முதுகலை, பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.