மாநில அளவில் நடத்தப்படும் ‘ஸ்லெட்’ தகுதித் தேர்வு அறிவிப்பு
வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பல்கலைக்கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ உதவி பேராசிரியர் பணியில் சேர வேண்டுமானால் தேசிய அளவிலான ‘நெட்’ தகுதித் தேர்விலோ அல்லது மாநில அளவில் நடத்தப்படுகின்ற ‘ஸ்லெட்’ தகுதித் தேர்விலோ கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரலாம். அதேநேரத்தில் ‘ஸ்லெட்' தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் குறிப்பிட்ட மாநிலத்தில் மட்டுமே பணியாற்ற முடியும். ஸ்லெட் தேர்வை நடத்துவதற்கு குறிப்பிட்ட பல்கலைக்கழகத்துக்கு 3 ஆண்டுகளுக்கு அனுமதி வழங் கப்படும். அந்த வகையில், தமிழகத்தில் ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கடைசியாக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டிருந்தது. அதற்கு முன்னர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஸ்லெட் தேர்வை நடத்தியது. இந்த நிலையில், 2015 முதல் 2018 வரை 3 ஆண்டுகளுக்கு ஸ்லெட் தேர்வு நடத்தும் பொறுப்பு கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதமே வழங்கிவிட்டது. ஆனால், அனுமதி கிடைத்து 5 மாதங்கள் ஆகியும் இன்னும் ஸ்லெட் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால், முதுகலை பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
ஆண்டுக்கு இரண்டு முறை
நெட் தேர்வானது ஆண்டுக்கு இரண்டு தடவை (ஜூன், டிசம்பர்) திட்டமிட்டபடி நடத்தப்படுகிறது. கடந்த 2014 ஜூன் மாதம் வரையில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)தான் நெட் தேர்வினை நடத்தி வந்தது. 2014 டிசம்பர் முதல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நெட் தேர்வை நடத்தி வருகிறது. நெட் தேர்வினைப் போன்று ஸ்லெட் தேர்வையும் ஆண்டுக்கு இரு முறை நடத்த வேண்டும் என்பது தமிழக மாணவர்களின் விருப்பம். இனிமேலும் காலதாமதம் செய்யா மல் உடனடியாக ஸ்லெட் தேர்வுக் கான அறிவிப்பை வெளியிட்டு விரைவாக தேர்வை நடத்த வேண் டும் என்று முதுகலை பட்டதாரி களும், தற்போது இறுதி ஆண்டு முதுகலை பட்டப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இதுதொடர்பாக முதுகலை பட்டதாரி மாணவர்கள் கூறுகையில், “நெட் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுவதால் போட்டி கடுமையாக இருக்கும். ஆனால், ஸ்லெட் தேர்வு, மாநில அளவிலான தேர்வு என்பதால் அதில் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தமிழகத்தில் ஸ்லெட் தேர்வு 2 ஆண்டுக்கு முன்னர் நடத்தப்பட்டது. அதன் பிறகு அத்தேர்வு நடத்தப்படவே இல்லை. நெட் தேர்வைப் போல ஸ்லெட் தேர்வையும் ஆண்டுக்கு இரு முறை நடத்த வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.