WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, September 16, 2015

பி.எட்., தரவரிசை பட்டியல்; நாளை மறுநாள் வெளியீடு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பி.எட்., படிப்புக்கான
தரவரிசைப் பட்டியல், வரும் 18ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், ஏழு அரசு மற்றும் 14 அரசு உதவி கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், வரும் 28ம் தேதி நடக்கிறது. அரசு சார்பில், லேடி வெலிங்டன் கல்லுாரி, மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. மொத்தமுள்ள, 1,800 அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, 7,500 பேர் விண்ணப்பித்து உள்ளனர். விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி, நேற்று முன்தினம் துவங்கியது. மதிப்பெண்ணுக்கு ஏற்ப, வெயிட்டேஜ் முறையில், தரம் நிர்ணயிக்கப்படுகிறது. தரவரிசை பட்டியல், 18ம் தேதி வெளியிடப்படும் என, உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.