WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, September 12, 2015

தலைமை ஆசிரியர் காலியிடம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

தமிழகத்திலுள்ள அரசு உயர்,மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
காலிபணியிடங்கள் குறித்த விபரங்களை, அனுப்ப பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வை சிலர் விரும்பவில்லை. இலவச நலத்திட்ட உதவிகளை வழங்குதல், சில பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையேயான கோஷ்டியை சமாளித்தல், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை மனதில் வைத்து பதவியை தவிர்த்தனர். இதன் காரணமாக தலைமை ஆசிரியர் பணியிடம் சில இடங்களில் நிரம்பாத நிலை உருவானது. இந்நிலையில் உயர்,மேல்நிலை பள்ளிக்கான தரம் உயர்வு பட்டியல் அறிவிப்பு இன்னும் வெளியாகாத சூழலில், தலைமை ஆசிரியர் காலி யிடம் சேகரிப்பு பதவி உயர்வை விரும்புவோருக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், “கலந்தாய்விற்கு பின், காலியிடம் பற்றி பட்டியல் கேட்பது வழக்கம். தரம் உயர்வு பள்ளிகள் அறிவிப்பு வெளியாகும் முன், பட்டியல் கேட்பதால் காலியிடங்களின் அடிப்படையில் தரம் உயர்வு பள்ளிகளை கணக்கிட்டு வெளியிடலாம். காலாண்டு நெருங்குவதற்குள் தரம் உயர்வு பள்ளிகள் பட்டியல் அறிவித்தால் மாணவர்களை சேர்ப்பது சிரம்ம் இருக்காது. டிசம்பருக்குள் அறிவிக்க வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.