தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மாறுதல் அமல்படுத்த கோரிக்கை
விடுக்கப் பட்டுள்ளது.
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின், மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. திண்டிவனம் தாகூர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் துளசிங்கம் வரவேற்றார்.
சங்க நிர்வாகிகள் பாபுராஜ், அர்ச்சுனன், நெப்போலியன், பாலு, ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தண்டபாணி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில், தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாறுதல் கலந்தாய்வு கொண்டு வரப்பட வேண்டும். மாநில மையத்தின் வழிகாட்டுதலின் பேரில், இந்தாண்டு வட்ட, மாவட்ட தேர்தல் நடத்துவது மற்றும் மாவட் டத்தில் பள்ளி ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.