பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற
உள்ளன. அதற்கான, வினாத்தாள் தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும் மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக
கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி மற்றும் தேர்வுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:ஒவ்வொரு ஆண்டும், நுாற்றுக்கு நுாறு, 'சென்டம்' எடுக்கும் மாணவர்; மாநில, 'ரேங்க்' பெறும் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதற்கு எளிமையான கேள்விகளும், மதிப்பெண்ணில் காட்டப்படும் தாராளமும் காரணம்.
எனவே, மாணவர்கள் பாடங்களை புரிந்து படித்துள்ளனரா அல்லது மனப்பாடம் செய்துள்ளனரா என, அறிய முடிவதில்லை. இதை, சோதனை செய்யும் விதமாக, இந்த ஆண்டு வினாத்தாள்களை சற்று கடினமாக தயாரிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதனால், வினாத்தாள் தயாரிக்கும் ஆசிரியர்களுக்கு, பாடங்களின் உள் அம்சங்களில் இருந்து, புதிய கேள்விகள் கேட்குமாறு, உத்தரவிடப்பட்டு உள்ளது.எனவே, 10 மற்றும் பிளஸ் 2 தேர்வு வினாத்தாள், கடினமாக இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது. எனவே, முந்தைய ஆண்டு தேர்வுகளின் வினாத்தாள், கெய்டுகள், புத்தகத்தில் பின்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ள வினாக்களை படித்தால் மட்டும் போதாது.
பாடப்புத்தகத்தில் உள்ள வழக்கமான கேள்விகள் மட்டுமின்றி, பாடத்தின் முழு சாராம்சத்தையும் புரிந்து படித்தால்தான், அதிக மதிப்பெண் பெற முடியும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதற்கிடையில், பாடப்புத்தகம் முழுவதையும், மாணவர்களை படிக்க வைக்குமாறு, அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு தேர்வுகள் துறை இயக்குனர் வசுந்தரா தேவி அறிவுறுத்தி உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.