WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 14, 2015

சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் 15 ஆயிரம் பேர் தேர்ச்சி.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்திய, சிவில்
சர்வீஸ் முதல்நிலை தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்., உள்ளிட்ட, 24 வகை பதவிகளுக்கான, 1,129 காலியிடங்கக்கு, ஆகஸ்ட், 23ல், சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வை, யு.பி.எஸ்.சி., நடத்தியது. தேர்வுக்கு விண்ணப்பித்த, 9.45 லட்சம் பேரில், 4.63 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டன. இதில், தேர்வு எழுதிய, 4.63 லட்சம் பேரில், தமிழகத்தைச் சேர்ந்த 500 பேர் உட்பட, 15 ஆயிரம் பேர், பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு, டிச.,18ல் முதன்மை தேர்வு நடத்தப்படும். இதற்கு, யு,பி,எஸ்,சி இணையதளத்தில், ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். வரும், 20ம் தேதி முதல் நவம்பர், 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பத்தை நகல் எடுத்து உறிய ஆவணங்கள் மற்றும் தேர்வுக் கட்டன ரசீது சேர்த்து, டில்லியில் உள்ள யு.பி.எஸ்.சி., அலுவலகத்துக்கு, நவம்பர், 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இதேபோல, இந்திய வனத்துறை பணிகளுக்கான, முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு முடிவுகளை, www.upsc..gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.