WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 14, 2015

அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு: அக்.19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பொதுபணிமுறை பணியிடங்களுக்கு அக்.19க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

வட சென்னையில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பொது பணிமுறை, மூன்றாம் பணிமுறைகளில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர், பண்டக உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பினை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி அறிவித்துள்ளார். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பொதுபணிமுறை

பதவி தொழிற்பிரிவு இனசுழற்சி

1.பணிமனை உதவியாளர்(1) கட்டடப் பட வரைவாளர் அருந்ததியர் முன்னுரிமை பெண்கள் ஆதரவற்ற விதவை 2.பணிமனை உதவியாளர்(1) கடைசலர் பொதுப்பிரிவு முன்னுரிமை இல்லை பெண்கள், ஆதரவற்ற விதவை 3. பணிமனை உதவியாளர்(1) இயந்திர வேலையாள் மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- சீர்மரபினர் முன்னுரிமை இல்லை பெண்கள் ஆதரவற்ற விதவை 4. பணிமனை உதவியாளர்(1) வர்ணம் அடிப்பவர் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் அல்லாத பிற்பட்ட வகுப்பினர் முன்னுரிமை இல்லை பெண்கள் ஆதரவற்ற விதவை 5. பண்டக உதவியாளர்(1) குழாய் பொருத்துபவர் (பிளம்பர்) பொதுப்பிரிவு (முன்னுரிமை)

மூன்றாம் பணிமுறை

1. பணிமனை உதவியாளர்(1) கம்மியர் இயந்திரப் பராமரிப்பு பொதுப்பிரிவு முன்னுரிமை 2.பணிமனை உதவியாளர்(1) பற்றவைப்பவர் (வெல்டர்) அருந்ததியர் முன்னுரிமை பெண்கள் ஆதரவற்றவிதவை தகுதி: 10 ஆம் வகுப்புதேர்ச்சி, மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் தேசிய தொழிற் சான்றிதழ், தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ்( என்டிசி-என்ஏசி) பெற்றிருக்க வேண்டும்

வயதுவரம்பு: 18 முதல் 35 க்குள் இருக்கவேண்டும். அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்விற்குட்பட்டது. சம்பளம்: தரஊதியத்தோடு சேர்த்து ரூ.5200-20200-1900.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்கள் துணை இயக்குநர் (அ) முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், (வட) சென்னை-21 என்ற முகவரிக்கு உரிய சான்றிதழ் நகல்களுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.10.2015.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.