WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 2, 2015

குரூப்-2-ஏ பணியிட நியமனம்: அக்.5 முதல் 2-வது கட்ட கலந்தாய்வு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

குரூப்-2-ஏ பணியிட தேர்வுக்கான 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 முதல் 13-
ம் தேதி வரை நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: குரூப்-2-ஏ தேர்வில் அடங்கிய பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்காக கடந்த 29.6.2014 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த டிசம்பர் 12-ம் தேதி வெளி யிடப்பட்டன. இதற்காக நடத்தப் பட்ட கலந்தாய்வின் முடிவில் காலி யாகவுள்ள 786 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு 2-வது கட்ட கலந்தாய்வு அக்டோபர் 5 முதல் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் அடங்கிய தற்காலிக பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு இருக்கிறது. மேலும், கலந்தாய்வு தேதி, நேரம் குறித்து சம்பந்தப்பட்ட விண் ணப்பதாரர்களுக்கு இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. மறுவாய்ப்பு கிடையாது விண்ணப்பதாரர்களின் மதிப் பெண், தரவரிசை, இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் காலியிடங்களுக்கு ஏற்ப அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். எனவே, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணிநியமனம் வழங்கப்படும் என் பதற்கு உறுதி அளிக்க இயலாது. கலந்தாய்வுக்கு வராதவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.