வங்கிகளுக்கு, ஐந்து நாள் தொடர் விடுமுறை என்பதில், மாற்றம் செய்யப்பட்டு
உள்ளது. 'வரும், 23ல் வங்கிகள் இயங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.ஆயுத பூஜை, விஜய தசமி, மொகரம், நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என, 21 முதல், 25ம் தேதி வரை, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், மொகரம் விடுமுறை வெள்ளிக்கிழமைக்கு பதில் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டு உள்ளது.எனவே, வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதனால், '21, 22 வங்கிகளுக்கு விடுமுறை; 23ல் வங்கிகள் இயங்கும்; 24, 25 விடுமுறை' என, வங்கி நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.