WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 14, 2015

வங்கிகளுக்கு 5 நாள் தொடர் விடுமுறை!

வங்கிகளுக்கு வரும், 21ம் தேதி முதல், 25ம் தேதி வரை தொடர்ந்து, 5
நாட்களுக்கு விடுமுறை வருகிறது. ஆனாலும், அந்த நாட்களில் ஏ.டி.எம்., மையங்கள் முடங்காது' என, வங்கிகள் தெரிவித்துள்ளன.நடப்பு மாதமான அக்டோபரில், வங்கிகளுக்கு, 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அக்., 2 - காந்தி ஜெயந்தி; 4 - ஞாயிற்றுக்கிழமை; 10 - இரண்டாவது சனிக்கிழமை; 11, 18 - ஞாயிற்றுக்கிழமை; 21 - ஆயுத பூஜை; 22 - விஜயதசமி; 23 - மொகரம்; 24 - நான்காவது சனிக்கிழமை; 25 - ஞாயிற்றுக்கிழமை.வரும் 21ம் தேதி முதல் 25ம் தேதி வரை, ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை. இதனால், நேரடி வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கும். ஏ.டி.எம்., மையங்கள் மற்றும் இணைய வங்கி சேவைகள் மட்டும் இயங்கும். அதிலும், ஏ.டி.எம்., இயந்திரத்தில் நிரப்பி வைக்கப்படும் பணம், ஐந்து நாட்களுக்கு தாக்குப் பிடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.இணைய வங்கி சேவையில், பணப் பரிமாற்றம் செய்தாலும், வேலை நாட்களில் மட்டுமே, அவற்றுக்கான அனுமதி அளிக்கப்படும். தொடர்ந்து, ஐந்து நாட்கள் விடுமுறை என்பதால், இணையம் மூலம் நடக்கும், பண பரிமாற்றத்துக்கும் வங்கி அனுமதி உடனே கிடைக்காது. இதனால், இணைய பண பரிமாற்றம் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது.இதுகுறித்து, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்பும் வேலையை, தனியார் ஏஜன்சிகள் தான் செய்கின்றன. எனவே, தொடர் விடுமுறை என்றாலும், ஏ.டி.எம்., மையங்களில் பணம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படாது. மேலும், சில வங்கிகளை தவிர, பெரும்பாலான வங்கிகளின் இணைய வழி கணக்குகளை, வாடிக்கையாளர்களே பராமரிக்கலாம். அதற்கு ஏற்றவாறு அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு உள்ளன. இணையம் மூலம் நடக்கும் பண பரிமாற்றத்தின் போது, வங்கிக்கு எஸ்.எம்.எஸ்., வரும். அதைக் கொண்டு, பண பரிமாற்றத்துக்கு தானாகவே அனுமதி கிடைத்து விடும். எனவே, இந்த ஐந்து நாட்கள் விடுமுறை குறித்து வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காசோலைகள், வரைவோலைகள் தேக்கமடையும்; அதை தவிர்க்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.