WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, October 21, 2015

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு தேதி மாற்றம்.

நெட்' தேர்வு நடக்கும் நாளில், 'குரூப் - 2 ஏ' தேர்வு நடப்பதால், பட்டதாரிகள்
குழப்பம் அடைந்துள்ளதாக, நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, தேர்வு தேதியை மாற்றி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்து உள்ளது.தமிழக அரசில், 33 துறைகளில் காலியாக உள்ள, 1,863 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், டிச., 27ல், 'குரூப் -- 2 ஏ' தேர்வு அறிவிக்கப்பட்டது.இந்த தேர்வு, நீண்ட காலத்துக்கு பின் நடப்பதால், லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால், அதே நாளில், பல்கலை பேராசிரியர் பணி தகுதிக்கான, 'நெட்' தேர்வும் நடக்கவுள்ளதால், தமிழக பட்டதாரி இளைஞர்கள் குழப்பம் அடைந்தனர். இதுகுறித்து, தினமலர் நாளிதழில், 18ல் விரிவான செய்தி வெளியானது. இதையடுத்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் அருள்மொழி தலைமையிலான உறுப்பினர்கள், நேற்று ஆலோசனை நடத்தினர். அனைத்து இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில், டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு தேதியை மாற்றுவது என, முடிவு எடுக்கப்பட்டது. இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:'குரூப் - 2 ஏ பிரிவில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 1,863 காலியிடங்களுக்கு, டிசம்பர் 27ல் தேர்வு நடக்கும்' என, அக்., 10ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந் நிலையில், 84 கூடுதல் பதவிகளை உள்ளடக்கி, தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 24ல், 'குரூப் - 2 ஏ' தேர்வு நடக்கும். இதற்கு, தேர்வாணையத்தின்www.tnpscexams.net மற்றும்www.tnpscexams.inஎன்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. தேர்வு பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளன. சந்தேகம் இருப்பின்,contacttnpsc@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரி அல்லது 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.