கோட்டா: பை எனப்படும், 70,000 கணித மதிப்பு எண்களை, நினைவுபடுத்திக்
கூறிய, வேலுார், வி.ஐ.டி., பல்கலைக்கழக மாணவரின் பெயர், கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
வட்டத்தின் சுற்றளவுக்கும், அதன் குறுக்களவுக்கும் இடையிலான விகிதம், கணிதவியலில், பை எனப்படும். இது, 3.14159 என்ற எண்ணால் தோராயமாக குறிக்கப்படுகிறது. இதை, 22/7 என்ற எண்ணாலும் குறிப்பிடலாம். ராஜஸ்தானைச் சேர்ந்த ராஜ்வீர் மீனா, தமிழகத்தின் வேலுாரில் உள்ள வி.ஐ.டி., பல்கலையில் படிக்கிறார். இவர், 70,000 பை மதிப்பு எண்களை தொடர்ச்சியாகக் கூறி, உலக சாதனை படைத்தார். இச்சாதனை, ஒன்பது மணிநேரம், 27 நிமிடங்களில் படைக்கப்பட்டது. கடந்த மார்ச்சில் நிகழ்த்தப்பட்ட இச்சாதனையை அங்கீகரித்து, கின்னஸ் நிறுவனம், 1ம் தேதி, சான்றிதழ் அளித்துள்ளது.
இதற்கு முன், 2005ல், சீனாவைச் சேர்ந்த லு சாவோ என்பவர், 67,890, பை மதிப்பு எண்களை, 24 மணி நேரங்களில் நினைவுபடுத்திக் கூறி, உலக சாதனை படைத்தார். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் அந்த சாதனையை, ராஜ்வீர் மீனா முறியடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.