WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 22, 2015

பார்வையற்றோர் பள்ளியில் ஆசிரியர் பணி மாநில பதிவு மூப்பு பட்டியல் தயாரிப்பு.

பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிகளில் காலியாக உள்ள
ஆசிரியர் பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் கருணாகரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: பார்வையற்றோர் மற்றும் காது கேளாதோர் பள்ளிகளில் காலியாக உள்ள துணை விடுதி காப்பாளர், இடை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட தகுதியான பதிவுதாரர்களின் பட்டியலை மாற்றுத் திறனாளி மாநில ஆணையர் கேட்டுள்ளார். அதன்பேரில், மாநில அளவிலான பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. துணை விடுதி காப்பாளர் பணிக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயத்துடன் காது கேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர் பணிக்கு, இடைநிலை ஆசிரியர் பட்டயப்படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு-1ல் தேர்ச்சியுடன் காது கேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான இளநிலை பட்டயம் பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பட்டப்படிப்புடன், ஆசிரியர் தகுதித்தேர்வு-2ல் தேர்ச்சியும், காதுகேளாதோர் அல்லது பார்வையற்றோருக்கான முதுநிலை பட்டயப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இப்பணிகளுக்கு கடந்த 1ம் தேதி அன்று பொதுபிரிவினர் 30 வயதும், பிற பிரிவினர்களுக்கு வயது வரம்பு கிடையாது. இந்த தகுதியடைய பதிவுதாரர்கள் வரும் 27ம் தேதிக்குள், கடலுாரில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.