WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 22, 2015

ராணுவ கல்விப் பிரிவில் வேலை பி.ஜி. படித்தவர்களுக்கு வாய்ப்பு.

    ராணுவ கல்விப் பிரிவில் வேலை பி.ஜி. படித்தவர்களுக்கு வாய்ப்பு


இந்திய ராணுவ கல்விப் படைப்பிரிவில் 123வது Army Education Corps பிரிவுக்கான பயிற்சி 2016 ஜூலையில் தொடங்க உள்ளது. இப் பிரிவில் சேர விரும்பும் திருமணமான/ திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: 

Army Education Corps (AEC-123) (July 2016).

சம்பளம்: 

ஒரு வருட பயிற்சி முடிந்ததும் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவர்களுக்கு ரூ.15,600 + தர ஊதியம் ரூ.5,400 மற்றும் இதர சலுகைகள்.

வயது வரம்பு: 

1.7.2016 தேதிப்படி 23 முதல் 27க்குள். அதாவது விண்ணப்பதாரர்கள் 2.7.1989க்கும், 1.7.1993க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

தகுதி: 

ஆங்கிலம்/பொருளியல்/வரலாறு/புவியியல்/ அரசியல் அறிவியல்/தத்துவஇயல்/உளவியல்/சமூகவியல்/பொதுநிர்வாகம்/ சர்வதேச உறவுகள்/ சர்வேதே கல்வி போன்றவற்றில் எம்.ஏ., அல்லது இயற்பியல்/வேதியியல்/கணிதம்/தாவரவியல்/ ஜியாலஜி/எலக்ட்ரானிக்ஸ் பாடத்தில் எம்.எஸ்சி., அல்லது சைனீஸ்/ திபெத்தியன்/பர்மீஸ்/புஷ்டோ/டேரி மற்றும் அராபிக் மொழிகளில் ஏதேனும் ஒன்றில் எம்.ஏ.

மேற்குறிப்பிடப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலைப் பட்டப்படிப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் சர்வீஸ் செலக்‌ஷன் போர்டு தேர்வுக்கு அழைக்கப்படுவர். உளவியல் தேர்வு, குழு விவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அலகாபாத், போபால், பெங்களூர் ஆகிய நகரங்களில் தேர்வு நடைபெறும்.

தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சியளிக்கப்படும். பயிற்சியின் போது மாதம் ரூ.21 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். டேராடூனில் உள்ள இந்திய ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி தொடங்கும். 

www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.10.2015.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.