WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, October 22, 2015

அனைத்து வங்கிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும்.

மொஹரம் பண்டிகைக்கான விடுமுறை சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டதால்
அனைத்து வங்கிகளும் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் மொஹரம் பண்டிகைகளுக்காக தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அரசு தலைமை காஜியின் அறிவிப்பைத் தொடர்ந்து மொஹரம் விடுமுறை, வெள்ளிக்கிழமையில் இருந்து சனிக்கிழமைக்கு மாற்றி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களும் நாளை வழக்கம்போல செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், வங்கிகள் அனைத்தும் நாளை இயங்கும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வரும் சனிக்கிழமை, நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் வங்கிகள் அனைத்திற்கும் விடுமுறை நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.