WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, October 11, 2015

பல்கலை பேராசிரியர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி.

மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பல்கலை பேராசிரியர்கள் மூலம், பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில், பள்ளிக் கல்வி துறையின் கீழ் உள்ள, அரசு பள்ளிகளில் மட்டும், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 42 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். சென்னை தவிர, மற்ற மாவட்டங்களில், தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் தான் மாணவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம், தனியார் பள்ளிகளை விட குறைவாக உள்ளது.
எனவே, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பலவித பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதன்படி, பல்கலை பேராசிரியர்கள் மூலம், ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டம், அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
முதற்கட்டமாக, சென்னை பல்கலை பேராசிரியர்கள் மூலம், சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, 300 ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். 
வரும், 12ம் முதல், 16ம் தேதி வரை; அதன்பின், 26ம் முதல், 30ம் தேதி வரை என, இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதையடுத்து, மற்ற பாட ஆசிரியர்களுக்கும், தொழில்நுட்ப பல்கலைகள் மூலம் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.