முறைகேடுகளுக்கு இடமின்றி, ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த,
முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, 923 காலியிடங்களுக்கு, மூன்று நாட்களாக, விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடந்துள்ளது. இந்நிலையில், இடைநிலை ஆசிரியர், சிறப்பாசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், பட்டப்படிப்பு முடித்திருந்தால், அவர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக, பதவி உயர்வு வழங்கப்படுகிறது.தமிழகம் முழுவதும் இந்த பதவி உயர்வுக்கு, 372 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களுக்கு, பதவி உயர்வுடன் இடமாறுதல் வழங்குவதில் எந்த முறைகேடும் இருக்கக் கூடாது என, அனைத்து சி.இ.ஓ.,க்களுக்கும், பள்ளிக் கல்வி இணை இயக்குனர் பழனிச்சாமி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.