WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 5, 2015

இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க,TNPSCயில் புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின்
தேர்வுகளில், விடைத்தாள் திருத்தம், இடஒதுக்கீட்டு முறையில் தாமதம் மற்றும் குளறுபடியை தவிர்க்க, புதிய டிஜிட்டல் முறை அமலாகிறது. தமிழக அரசு துறைகளில் காலியாகும் இடங்களுக்கு, தமிழக அரசின் பணி நியமன அமைப்பான, டி.என்.பி.எஸ்.சி., மூலம் போட்டித்தேர்வு நடத்தி, ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர்.கடந்த 2013 - 14ல், 79 வகையான பதவிகளுக்கு, 16 ஒருங்கிணைந்த தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி., நடத்தியுள்ளது. அவற்றில், 14,600 காலியிடங்களுக்கு, 41 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்; பெரும்பாலான முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டன. சில தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடுவதில், தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், இடஒதுக்கீட்டில் பிரச்னை ஏற்பட்டு, வழக்கு தொடர்வதும் தொடர்கதையாக உள்ளது. தேர்வு முடிவு தாமதத்தை தவிர்த்தல்; வழக்குகளின் எண்ணிக்கையை குறைத்தல்; இடஒதுக்கீட்டு முறையில் தெளிவான நிலை போன்றவற்றுக்காக, டி.என்.பி.எஸ்.சி., புதிய திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.