பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு களுக்கு அரசு தேர்வுத்துறை மூலம்,
பொதுவான வினாத்தாள் அடிப்படையில், அரையாண்டு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு டிச., 9ல் துவங்கி, டிச., 21ல் முடிகிறது; பிளஸ் 2 தேர்வு டிச., 7ல் துவங்கி, டிச., 22ல் முடிகிறது. 10ம் வகுப்பு தேர்வு காலை, 10:00 மணி முதல், 12:45 மணி வரை நடக்கும். பிளஸ் 2 தேர்வு காலை, 10:00 மணி முதல், 1:15 மணி வரை நடக்கும். முதல், 10 நிமிடங்கள் வினாத்தாளை படிக்கவும், அடுத்த, ஐந்து நிமிடங்கள் விடைத்தாள் விவரங்களை நிரப்பவும் நேரம் வழங்கப்படும். பருவ மழையால், ஒரு வாரமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வுக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டிய பாடங்களை நடத்தாத நிலை உள்ளது. அறிவியல் செய்முறை தேர்வுக்கான, 'ரெக்கார்டு' தயாரித்தல் மற்றும் செய்முறை பயிற்சி மேற்கொள்ளுதல் போன்ற பணிகளும் இன்னும் துவங்கவில்லை.எனவே, திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நடக்குமா அல்லது தள்ளிப் போகுமா என மாணவர்களும், பெற்றோரும் சந்தேகம் அடைந்துஉள்ளனர். அரையாண்டு தேர்வு என்றால், பாடப் புத்தகத்திலுள்ள அனைத்து பாடங்களும் நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். தேர்வுக்கு இன்னும், 20 நாட்களே உள்ள நிலையில், அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க முடியுமா என, ஆசிரியர்களும் சந்தேகம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன், அரையாண்டு தேர்வை முடிக்க வேண்டும் என்பதால், தேர்வு தேதியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை' என்றனர். ஆபத்தான வகுப்பறைகளுக்கு பூட்டு மழையால் பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் உள்ள பள்ளி வகுப்பறைகளுக்கு, பூட்டு போட, பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை: தொடர் மழையால், பள்ளிகளின் சுற்றுச்சுவர் ஈரப்பதத்துடன் காணப்படும். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து குறைந்தது, 20 அடி துாரம் வரை, மாணவர்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகளை திறக்க வேண்டாம். அவற்றை பூட்டி, மாணவர்கள் அருகே செல்லாமல் பாதுகாக்க வேண்டும் மின் கசிவை கண்டறிந்து, மின் இணைப்பை தற்காலிகமாக துண்டிக்க வேண்டும் பள்ளி வளாகத்தில் நீர் தேங்கியிருந்தால் அதை அகற்றுவதுடன், திறந்த நிலையில் தொட்டிகள், பள்ளங்கள் இருந்தால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் வெள்ளம் வரும் இடங்கள், நீர் நிலைப்பகுதிகளை தவிர்க்க மாணவர்களுக்கு அறிவுறுத்துவதுடன், 'வெள்ளத்தை வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது' என, எச்சரிக்க வேண்டும் பருவ மழையால், 'சிக்-குன் குனியா, டெங்கு' போன்ற காய்ச்சல் வராமல் முன்னெச்சரிக்கையாக இருக்க, மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.