கனமழை தொடர்வதால், சென்னை உட்பட, 12 மாவட்டங்களில், பள்ளிகளுக்கு
இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.'கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில், இன்னும் இரு நாட்களுக்கு கனமழை நீடிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால், சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலுார், கடலுார், திருவாரூர், நாகை, திருவண்ணாமலை, பெரம்பலுார் என, ஒன்பது மாவட்டங்களில் பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர், அரியலுார், துாத்துக்குடி மாவட்டங்களில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.