மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி உட்பட, 16 இடங்களில் உள்ள அரசு
பொறியியல் கல்லுாரிகளில், பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப, அண்ணாபல்கலை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி, மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட மொத்தம், 13 பாடப் பிரிவுகளில், 178 உதவி பேராசிரியர்கள்; 102 பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு, 37 ஆயிரம் முதல், 74 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் நிர்ணயிக்கப்படும். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மட்டுமே, ஓய்வூதியம் கிடைக்கும். வரும், 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்படி அண்ணா பல்கலை அறிவித்துள்ளது. கூடுதல் விவரங்களை, பல்கலை இணையதளத்தில் அறியலாம்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.