நாடு முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள்,
இயக்குநர்கள், தலைவர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, 3 நாள் மாநாட்டை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நடத்தவுள்ளார்.
இந்த மாநாடு தில்லியில், வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.
கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கண்டறிவதற்காகவும், இந்தியக் கல்வி நிறுவனங்களை, உலகின் முன்னணி கல்வி நிறுவனமாகக் கொண்டு வருவதற்காகவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடி, மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாரத ரத்னா விருதுபெற்ற பேராசிரியர் சி.என்.ஆர்.ராவ், பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நாடு முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களை ஒருசேர அழைத்து குடியரசுத் தலைவர் கூட்டம் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு, மத்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (என்ஐடி), இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் (ஐஐடி), இந்திய அறிவியல் கல்வி, ஆய்வு நிறுவனம் (ஐஐஎஸ்இஆர்) ஆகிய கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்கள் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.