வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்று அழுத்த தாழ்வு
நிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் டிச., 2 வரை நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யலாம்' என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.வானிலை மைய அறிக்கை:
வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்று அழுத்த தாழ்வு நிலை, குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலையாக வலுவடைந்து உள்ளது. இதனால் இன்று முதல், நான்கு நாட்களுக்கு கனமழை பெய்யும். அதன் விபரம்:நவ., 29: தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் பரவலாக கனமழை அல்லது மிக கன மழை பெய்யும்.நவ., 30, டிச., 1: தமிழக கடலோர பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மிகக் கனமழையும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும்.டிச., 2: தமிழக கடலோர பகுதிகள், பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்யும்.குளிர்: தமிழகத்தின் சமவெளி பகுதிகளில் குளிர் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. தர்மபுரி, வேலுார் மாவட்டம், திருப்புத்துாரில் அதிகபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ் என பதிவாகி உள்ளது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.