WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 28, 2015

இடை நின்ற மாணவர்களின் பட்டியல் தயாரிக்க உத்தரவு.

பள்ளிகளில், 8ம் வகுப்புக்குள் படிப்பை நிறுத்திய மாணவர் பட்டியலை
கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.மத்திய அரசின், கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி, 14 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், இலவசமாக, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்; இதற்கு மத்திய அரசு மூலம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், மாணவர், இடையில் படிப்பை விடாமல் பார்த்து கொள்ளவும், படிப்பை விடும் மாணவர்களை, தாமதமின்றி, அவர்களின் நிலையை அறிந்து, கல்வி வழங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இந்த ஆண்டு இதுவரை பள்ளிகளில் சேர்ந்து, 8ம் வகுப்புக்குள், பள்ளிக்கு வராமல் இடையில் நின்ற மாணவர் பட்டியலை தயாரிக்க, அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல், தங்கள் பகுதிகளில், 14 வயதுக்கு உட்பட்ட, பள்ளிக்கு படிக்கவே வராத மாணவர் பட்டியலை தயாரித்து அனுப்பும்படியும், அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.