WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 7, 2015

பல்கலையின் மெத்தனம் விண்ணப்பதாரர்கள் அவதி

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை கழகத்தில்,
பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்ட பிறகும், அதன் விவரங்களை இணையதளத்தில் வெளியிடாதது, விண்ணப்பிக்க விரும்புவோரிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த மேலக்கோட்டையூரில், இப்பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு, மூன்று பேராசிரியர்; நான்கு இணை பேராசிரியர்; ஒன்பது உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தவிர, தட்டச்சர், டெலிபோன் ஆப்பரேட்டர், டிரைவர், அலுவலக உதவியாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இப்பணியிடங்களை நிரப்ப, நவ., 1ல் அறிவிப்பு வெளியானது. விண்ணப்பிக்க விரும்புவோர், நவ., 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி உள்ளிட்ட மற்ற விவரங்கள், பல்கலை இணையதளத்தில் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டது. அதன்படி, பேராசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான விவரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பேராசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. அதனால், இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சிரமப்படுகின்றனர். இந்த விவரங்களை இணையதளத்தில் உடனே வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.