WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 17, 2015

சென்னை மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிப்பு

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைத் தொடர்ந்து சென்னை மாவட்டத்தில்
உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்ததன் காரணமாக பெய்த கன மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று ஓரளவுக்கு மழை குறைந்தாலும், பல இடங்களிலும் வெள்ளம் வடியாததால் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி புதன்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.