WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, November 10, 2015

கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடம் முறைப்படுத்தி ஆணை.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், நேரடியாக பணியமர்த்தப்பட்ட கணித பட்டதாரி
ஆசிரியர்களுக்கு பணியை முறைப்படுத்தி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு பணிகளில் பணியமர்த்தப்படுபவர்கள், இரண்டாண்டு முழுமையாக பணிபுரிந்த பின்பே பணி வரன் முறை செய்யப்படும். அதன் பின்பே, மருத்துவ விடுப்பு, ஊக்க ஊதியம், ஊதிய உயர்வு போன்ற சலுகைகளை பெற இயலும். ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கடந்த, 2010-11ம் ஆண்டில் காலியாக இருந்த பணியிடங்களில், நேரடியாக பணியமர்த்தப்பட்ட கணித பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல், முறையான நியமனமான, முறைப்படுத்தப்பட்டு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் படி, மேற்குறிப்பிட்ட கணித பட்டதாரி ஆசிரியர்கள் நேரடியாக தேர்வு வாரியம் மூலம் பணியமர்த்தப்பட்டுள்ளதால், தனியார் பணி வரன்முறை செய்யவேண்டியதில்லை எனவும், அவ்வாசிரியர்களின் பணி பதிவேட்டில் உரிய மாற்று பதிவுகளை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தவும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் கருப்புசாமி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.