தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச
பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், வேலுார், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களின் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நீரில் நனைந்தும் சேதமாகி விட்டன.
பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை மீண்டும் இலவசமாக வழங்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதற்கான பட்டியலை விரைவில் சேகரிக்குமாறு, சம்பந்தப்பட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு
உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.