WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 6, 2015

கல்வி தரத்தில் கவனம் செலுத்தாத அதிகாரிக்கு நோட்டீஸ்!

மாணவர்களின் கல்வி தரம் உயர்த்துவதில் கவனம் செலுத்தாத,
ஜமுனாமரத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டு, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள உறைவிட பள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் போலி வருகை பதிவேடு, பொய்யான கணக்கு காட்டி நிதி மோசடி, பல ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமலேயே கையெழுத்து போட்டு வந்தது, குழந்தைகளுக்கு அடிப்படை கல்வித்திறன் கூட இல்லாமல் பின்தங்கிய நிலையில் உள்ளது ஆய்வில் தெரிந்தது. இதையடுத்து, மூன்று தலைமையாசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்நிலையில், ஜவ்வாது மலையில் உள்ள பள்ளிகளில், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் பணியை சரியாக கண்காணிக்காத, ஜமுனாமரத்தூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் கோவிந்தராஜூக்கு, திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் விளக்கம் கேட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.