தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள், பணி நிரவல் என்ற பெயரில்,
துாக்கி அடிக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரத்து, 500 பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு, 3 முதல், 5ம் தேதி வரை பணி நிரவல் இடமாறுதல் நடந்தது. பகுதி நேர பாடப் பிரிவுகளில், காலியாக இருந்த, 3,500 இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
இதில், விதிமீறல்கள் நடந்துள்ளதாகவும், ஒவ்வொரு ஆசிரியரும், 70 கி.மீ., நீண்ட துாரத்திற்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளதாகவும், சிறப்பாசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, கலை ஆசிரியர்கள் நலச் சங்கத் தலைவர் ராஜ்குமார் கூறியதாவது:
பகுதி நேர ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வில், அருகிலுள்ள இடம் ஒதுக்க, ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளனர். மாதம், 7,000 சம்பளம் பெற்று, கடனில் தவிக்கும் ஆசிரியர்களிடம், லஞ்சம் வாங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, முதல்வரின் தனிப்பிரிவில் மனு அளித்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.