WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 20, 2015

பள்ளி திறந்ததும் வகுப்பு நேரம் கூடுது.

வட கிழக்கு பருவ மழை வெள்ளத்தால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும்
திருவள்ளூர் மாவட்டங்களில், தீபாவளிக்குப் பின், 10 வேலை நாட்கள், பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. வரும் 23 முதல், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. கடந்த ஒன்றரை மாதத்தில், 20 நாட்கள் மட்டுமே, பள்ளி, கல்லுாரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. மற்ற நாட்களில், பண்டிகை விடுமுறை, மழை விடுமுறை விடப்பட்டு விட்டது. இதனால், பெரும்பாலான பாடங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை. இதனால், பாடங்களை முடிக்க ஆசிரியர்கள், கல்வித் துறையினர் திட்டமிட்டுள்ளதாவது: * மழைக்காக விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில், பள்ளிகளுக்கு, மதிய இடைவேளை நேரத்தைக் குறைத்து; மாலை நேரத்தில், கூடுதல் நேர பாடப்பிரிவு ஒதுக்கி பாடங்கள் நடத்தப்படும் * சனிக்கிழமைகளில், 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பள்ளிகள் முழு நேரம் இயக்கப்படும் * மழையால், கல்லுாரிகளில் தேர்வுகள் ரத்தாகி உள்ளதால், தேர்வு நாட்களை குறைத்து, மற்ற நாட்களில், கூடுதல் பாட வேளைகள் ஏற்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.